

ராமநாதபுரத்தில் பாஜக சார்பில் 'வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம்’ என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது.
பாஜக மாவட்டத் தலைவர் கே.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியை, மாநிலச் செய்தி தொடர்பாளர் து. குப்புராமு தொடங்கி வைத்தார்.
அரண்மனை முன்பாக தொடங்கிய இந்தப் பேரணி, ராமநாபுரம் நகராட்சியின் பல்வேறு முக்கிய வீதிகளைச் சுற்றி வந்து அரண்மனையிலேயே முடிந்தது.
மாவட்டப் பொதுச்செயலாளர் குமார், மாவட்டச் செயலாளர் மணிமாறன், நகர் தலைவர் வீரபாகு, அரசு தொடர்பு பிரிவு தலைவர் நடராஜன், ஊடகப் பிரிவு செயலாளர் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.