

ராமநாதபுரம் மாவட்டத்தில் மது பாட்டில்கள் கடத்தலைத் தடுக்க சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதையடுத்து, கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தல், மது பாட்டில்களை கடத்துதல் போன்ற செயல்களைத் தடுக்கவும், மதுபானக் கடைகளின் தினசரி விற்பனையைக் கண்காணிக்கவும், இது தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் ராமநாதபுரம் மாவட்டத்துக்குப் பொறுப்பு அலுவலராக டாஸ்மாக் உதவி மேலாளர் (கணக்கு) ஜி.மகாதேவி நியமிக்கப்பட்டுள்ளார். மது விற்பனையில் விதிமீறல் தொடர்பான புகார்களை 8248057916 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்டத் தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் சில்லரை விற்பனைக் கடைகளில் அளவுக்கு அதிகமாக மது விற்பனை தொடர்பான தேர்தல் கட்டுப்பாடு அறைக்கு வரும் புகார்களைக் கண்காணிக்கவும் சிவகங்கை மாவட்டத்துக்கு தொடர்பு அதிகாரியாக டாஸ்மாக் உதவி மேலாளர் வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்புக்கு: செல்போன் - 99448 59895.இத்தகவலை மாவட்டத் தேர்தல் அலுவலர் பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.