Special
பெட்ரோல் வாங்க வங்கி கடன் கேட்டு போராட்டம்
பெட்ரோல் வாங்க வங்கிக் கடன் கேட்டு தேனியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட மாணவரணி சார்பாக போராட்டம் நடந்தது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எாிவாயு சிலிண்டாின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கி விட்டது.
இந்நிலையில் தேனி அல்லிநகரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன் நடந்த போராட்டத்துக்குப் பொதுச் செயலாளர் திவான் தலைமை வகித்தார். பெட்ரோல் விலை உயர்வால் அடித்தட்டு மக்கள்மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் ஏற்கெனவே பொருளாதார சிக்கலில் தவித்துவரும் நிலையில் இந்த விலை உயர்வு பலரையும் வெகுவாய் பாதித்துள்ளது. எனவே, பெட்ரோல் வாங்க தனிநபர் கடன் கேட்டுப் போராட்டம் நடத்துகிறோம் என்றனர்.
