தேவாலயங்களை சீரமை

தேவாலயங்களை சீரமை
Updated on
1 min read

வகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் தேவாலயங்களில் பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்ள நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்கீழ் நிதியுதவி பெற தேவாலயம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தக் கட்டிடத்தில் இயங்க வேண்டும். தேவாலயம் உள்ள இடத்தை தேவாலயத்தின் பெய ரில் பதிவு செய்திருக்க வேண் டும். தேவாலயத்தை சீரமைக்க வெளிநாடுகளில் இருந்து எவ்வித நிதியுதவியும் பெற்றிருக்கவில்லை என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். சீரமைப்பு பணிக்காக ஒருமுறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்துக்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அளிக்கப்படும்.

விண்ணப்பப் படிவத்தை உரிய ஆவணங்களுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவல கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து விண்ணப் பிக்கலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in