ராமநாதபுரம் புதிய அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு சுகாதாரத்துறை இணைச் செயலர் தகவல்

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்த சுகாதாரத்துறை இணைச்செயலாளர் எஸ்.நடராஜன்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்த சுகாதாரத்துறை இணைச்செயலாளர் எஸ்.நடராஜன்.
Updated on
1 min read

கல்லூரியில் வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடந்த பணிகள் நடந்து வருவதாக சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணைச் செயலர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

புதிய மருத்துவக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு, சிகிச்சைப் பிரிவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள 5 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம், தர்மபுரி உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைகளை ஆய்வு செய்ய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலர் எஸ்.நடராஜன் நியமிக் கப்பட்டுள்ளார். அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற் கொண்டார்.

அப்போது புதிதாகக் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடப் பணிகள் 48 சதவீதம் நிறைவடைந்துள்ளன. புதிய மருத்துவக் கல்லூரியில் வரும் ஆண்டில் முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடத்த பணிகள் நடந்து வருகின்றன.

மருத்துவக்கல்வியின் விதிமுறைப்படி புதிய மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் உள்கட்டமைப்பு உள்ளதா என ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.

ஆய்வின்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் எம்.அல்லி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக் குநர் சகாய ஸ்டீபன்ராஜ், துணை இயக்குநர்கள் பொற்கொடி(சுகாதாரம்), சிவானந்தவள்ளி (குடும்ப நலம்), ரவிச்சந்திரன் (தொழுநோய்), கிருஷ் ணமூர்த்தி (காசநோய்), தேசிய சுகாதா ரக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.முதிலேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in