

இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப் படும் நகர் பஸ்களின் சேவை மீண்டும் தொடங்காததால், 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தவித்து வருகின்றனா்.
கமுதியில் இருந்து கோவிலாங்குளம் வழியே பெருநாழிக்கு நகர் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், இவை கரோனா பரவலால் நிறுத்தப்பட்டி ருந்தன.
தற்போது, ராமநாதபுரம் மாவட்டம் கரோனா பாதிப்பு இல்லாத மாவட் டமாக மாறியுள்ளது. ஆனால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களை முழு வதுமாக இயக்கவில்லை.
இதனால், மாணவ, மாணவியா் குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. மேலும், 15 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள் விவசாய பணிகளை செய்ய முடியாமல் தவித்து வரு கின்றனர்.
எனவே, வழக்கம்போல் நகர் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.