மன்னார் வளைகுடா கடலில் படகு சவாரி செய்துகொண்டே கடல்வாழ் உயிரினங்களை சுறறுலாப் பயணிகள் பார்வையிட படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது

பிச்சை மூப்பன் வலசை கிராமத்தில் இருந்து  நவீன லைப் ஜாக்கெட் அணிந்து படகில் கடலுக்குள் பயணிக்கும் சுற்றுலா பயணிகள்.
பிச்சை மூப்பன் வலசை கிராமத்தில் இருந்து நவீன லைப் ஜாக்கெட் அணிந்து படகில் கடலுக்குள் பயணிக்கும் சுற்றுலா பயணிகள்.
Updated on
1 min read

மன்னார் வளைகுடா கடலில் படகு சவாரி செய்துகொண்டே கடல்வாழ் உயிரினங்களை சுறறுலாப் பயணிகள் பார்வையிட படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட பிச்சை மூப்பன் வலசை கிராமத்தில் இந்த படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில், கடல் மார்க்கமாக சுமார் ஒரு கி.மீ. தொலைவில் மணல் திட்டுகள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பவளப்பாறைகள், கடல்வாழ் உயிரினங்கள் கடல் தாவரங்கள் அதிகம் வளர்ந்துள்ளன. இதையறிந்த மன்னார் வளைகுடா தேசியப் பூங்கா வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு படகு சவாரி தொடங்க முடிவு செய்தனர்.

இதையடுத்து 2 படகுகள் வாங்கப் பட்டன. இதில் ஒரு படகின் அடிப் பகுதியில் கண்ணாடி பொருத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து கீழக்கரை வனவர் கனகராஜ் கூறியதாவது: பவளப்பாறைகள் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கும் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த இடமாக உள்ளது. மேலும் சுனாமியின் போது அலைகளின் வேகத்தை தடுக்கும் சுவராகவும், கடல் வெப்ப நிலையைச் சமப்படுத்தும் ஆக்சிஜனை உற்பத்தி செய்யவும், கார்பன் டை ஆக்ஸைடை கட்டுப்படுத்தும் காரணியாகவும் பவளப் பாறைகள் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் பவளப் பாறைகளை வெகுவாக ரசிக்கின்றனர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in