

ராமநாதபுரம் மாவட்டம் திரு வாடானை அருகே உள்ள குறுந்தங்குடியைச் சேர்ந்த விவசாயி ரமேஷ்(36). இவரது மனைவி சாந்தா என்ற சுகந்தி(28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ரமேஷ், நேற்று மதியம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி சாந்தாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். அதனையடுத்து ரமேஷ் திரு வாடானை காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீஸார் அவரை கைது செய்தனர்.