Published : 29 Oct 2021 03:10 AM
Last Updated : 29 Oct 2021 03:10 AM

நாமக்கல்லில் நாளை 7-வது சிறப்பு முகாம் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டம் :

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 7-வது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 1 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரை முதல் தவணை தடுப்பூசி 9 லட்சத்து 47ஆயிரத்து 626 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 3 லட்சத்து 85 ஆயிரத்து 337 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 8,269 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 868 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 6 கட்ட தடுப்பூசி முகாம்களில் 3 லட்சத்து 18 ஆயிரத்து 523 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுபோல் நாளை (30-ம் தேதி) 7-ம் கட்ட தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 750 முகாம்களில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 1 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x