பொறுப்பேற்றபின் முதல்முறையாக உதகை வந்த தமிழக ஆளுநர் :

பொறுப்பேற்றபின் முதல்முறையாக உதகை வந்த தமிழக ஆளுநர் :
Updated on
1 min read

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்று முதல்முறையாக 4 நாள் பயணமாக உதகை வந்தார்.

கோவையில் இருந்து சாலை மார்க்கமாக உதகை வந்த ஆளுநரை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் வரவேற்றனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. உதகையில் உள்ள ராஜ்பவனில், தனது குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுக்க உள்ளதாகவும், உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை குடும்பத்தினருடன் கண்டுகளிப்பார் எனவும் கூறப்படுகிறது. வரும் 19-ம் தேதி ஆளுநர் சென்னை திரும்புகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in