

திருப்பூர் நெருப்பெரிச்சல் தோட்டத்துபாளையத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (30). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி முருகேஸ்வரி (25). மகள் சபீதா (4). கணவருடன், முருகேஸ்வரிக்கு பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து தாய் மற்றும் மகள் இருவரும் மாயமாகினர். இதுதொடர்பாக அசோக்குமார் அளித்த புகாரின் அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து தாய் மற்றும் மகளை தேடி வருகின்றனர்.