

9 மாவட்டங்களிடில நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் குறிப்பிட தக்க அளவில் வெற்றி பெற்றிருந்தாலும், அவர்க ளைச் சார்ந்த ஆண்களுக்கே கிராமங்களுக்கு கூடுதல் மரியாதை அளிக்கப்பட்டு, முன்நிறுத் தப்படுகின்றனர்.
உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ கத்தில் முதன்முறையாக கடந்த 2019-ம் ஆண்டு 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. கிராம நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்கும் வகையில் இந்த மாற்றம் கொண்டு வரப் பட்டுள்ளது.
இதற்கிடையே, தற்போது விடு பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.
கடந்த 12-ம் தேதி பிற்பகல் முதல் முடிவுகள் வெளியாகிக் கொண் டிருக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றி யத்தில் வெற்றி பெற்றவர்கள் ஆட்டம் பாட்டம், பட்டாசு எனஅமளி துமளியோடு சாலைகளில்ஆர்ப்பரித்தனர். வெற்றிபெற்ற வரை கொண்டாடும் விதமாக அவரை தோளில் தூக்கி வருவது, மாலை அணிவித்து ஆரத்தி எடுப் பது போன்ற சம்பவங்களை காண நேர்ந்தது.
இதில் வேடிக்கை என்னவென் றால், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற பெண்களை யாரும் கொண் டாடவோ, மரியாதை செய்யவோ முன்வராமல், அவரது உறவு முறையான கணவர் அல்லது மகன்களுக்குத் தான் மேற்கண்ட சம்பவங்கள் அரங்கேறின.தோல்வியை தழுவியர்கள் தலைகுனிந் தவாறு முக இறுக்கத்துடன் மையத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.
தேர்தலுக்கு முன்பான பிரச்சாரத்தில் கூட பெண் வேட்பாளர் கள், தங்கள் கணவரின் புகைப்படம் அடங்கிய துண்டு பிரசுரத்தை மக்களிடம் விநியோகித்து வந்தனர். என்ன பணிகள் நடைபெறும், என்னவாக்குறுதிகள் என்று தங்கள் கணவ ரையே முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ததைக் காணமுடிந்தது.
அரசியலமைப்புச் சட்டம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கிய நிலையிலும், அதை அதிகாரபூர்வமாக அவர்கள் அதைஅனுபவிக்க முடியவில்லை என்ப தோடு, அவர்களை அனுபவிக்க உறவு முறைகளே தடையாக இருக்கிறது என்பதையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன.
கடந்த 2019-ம் ஆண்டு நடை பெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஆகஸ்டுமாதம் உள்ளாட்சி அமைப் பின் செயல்பாடுகள், தலைவர் களுக்கான அதிகாரம் குறித்த கருத்தரங்கம் காணொலி காட்சி வாயிலாக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடை பெற்றது. இதில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு மாற்றாக அவரது கணவர்களும் மகன்களுமே பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பெண் தலைவர்களின் கணவர்களிடம் பேசியபோது, "அவர்க ளுக்கு போதிய அனுபவம் கிடை யாது. எப்படி பேச வேண்டும் என்று தெரியாது, அதனால் நாங்கள் கலந்து கொண்டோம்" என்றனர்.
ஆனால் விதிவிலக்காக கம்யூ னிஸ்ட் கட்சியின் மீது பார்வை கொண்ட பெண்கள் சிலர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, அவர்கள் உள்ளாட்சியின் அதிகாரத்தை தங்கள் வசமே வைத்திருப்பது ஆறுதலான விஷ யம்.