திருவள்ளூர், செங்கை, காஞ்சி மாவட்டங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருத்தணி அருகே ஆர்.கே.பேட்டை பகுதியில் விவசாய சங்கங்களின் போராட்டக்குழு, தொழிற்சங்கங்களின் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

Updated on
1 min read

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் திருவள்ளூர், செங்கை, காஞ்சி மாவட்டங்களில் நேற்று மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடத்த முயற்சித்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் பேரணிக்கு போலீஸார் அனுமதிக்காததால், கிருஷ்ணாபுரம் பகுதியில் பேரணியை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

திருத்தணி அருகே 150-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பேரணியாக சென்றனர்.

செங்கை மாவட்டத்தில் செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி பகுதிகளிலும் பேரணி நடைபெற்றது.

காஞ்சி மாவட்டத்தில் சின்னகாஞ்சிபுரம் பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள் பேரணியில் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in