துணிக் கடைகளில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
மதுரையில் துணிக் கடைகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர் மற்றும் வளரிளம் தொழிலாளர்கள் 4 பேர் மீட்கப்பட்டனர்.
மதுரை மாவட்டத்தில் குழ ந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? என மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் சீ.மைவிழிச்செல்வி தலைமையில் உதவி ஆய் வாளர்கள் எல்.நாகராஜன், ரா.சிவசங்கரி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
குழந்தைப் பாதுகாப்பு அலகு அலுவலர்கள், சைல்டு லைன் உறுப்பினர்கள் ஆட்கடத்தல் தடுப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர் உதவியுடன் திரு மலை நாயக்கர் மகால் பகுதியைச் சுற்றியுள்ள துணிக் கடைகளில் ஆய்வு நடந்தது. இதில் 14 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை தொழிலாளி, 18 வயது நிரம்பாத 3 வளரிளம் பருவத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
துணிக் கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வணிகர்கள் குழந்தை தொழி லாளர் முறையை ஒழிக்க ஒத்து ழைக்க வேண்டும். தவறினால் ரூ.50 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டரை ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க சட்டத்தில் இடம் உள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி எச்சரித்துள்ளார்.
