

பூச்சிக் கொல்லி மருந்தின் நெடி தாக்கி தொழிலாளி இறந்தார்.
தேனி மாவட்டம், போடி கோணாம்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் அழகர்(60). விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் ஜங்கால்பட்டியில் உள்ள பருத்திச் செடிகளுக்கு கடந்த 5-ம் தேதி பூச்சி மருந்து தெளித்துள்ளார். இதன் நெடி தாங்காமல் வயிற்றுவலி ஏற்பட்டு மயங்கினார். 108 ஆம்புலன்ஸ் மூலம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந் தார். வீரபாண்டி சார்பு ஆய் வாளர் லதா விசாரிக்கிறார்.