

தேனி அரசு சட்டக் கல்லூரியில் மாணவ, மாணவிகளை சிறந்த வழக்கறிஞர்களாக உருவாக்கும் பொருட்டு மாதிரி நீதிமன்றம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மாதிரியாக உருவாக்கப்பட்ட வழக்கில் 40 மாணவ, மாணவியர் இரண்டு குழுவாகப் பிரிந்து வாதம், எதிர்வாதம் செய்தனர்.
குறுக்கு விசாரணை, ஆவணங்கள் சமர்ப்பிப்பு, எழுத்துப்பூர்வமான அறிக்கை போன்றவை நடைபெற்றன.
வாதத்தின் அடிப்படையில் மாணவர்களின் திறன் மதிப்பீடு செய்யப்பட்டது. பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வழக்கறிஞர்கள் லலிதா, சுரேஷ்குமார் ஆகியோர் நீதிபதிகளாகக் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தேனி அரசு சட்டக் கல்லூரி மாதிரி நீதிமன்ற கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.