Published : 27 Nov 2021 03:08 AM
Last Updated : 27 Nov 2021 03:08 AM

மதுரை அருகே மழைக்கு 3 கூரை வீடுகள் இடிந்தன :

மதுரை அருகே கள்ளந்திரியில் 102.6 மிமீ மழை பதிவானது. புறநகர் பகுதியில் மழைக்கு 3 கூரை வீடுகள் இடிந்தன.

மதுரையில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 60.52 மிமீ மழை பதிவானது. நேற்று காலை 8 மணி வரையில் 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம்(மிமீ):

சிட்டம்பட்டி-65.2, கள்ளந் திரி-102.6, தனியாமங்கலம்-67, மேலூர்-64, சாத்தியார் அணை-50, வாடிப்பட்டி-67, திருமங்கலம்-58.6, உசிலம்பட்டி-43, மதுரை-49.5, விரக னூர்-35.6, விமான நிலையம்-53, இடையபட்டி-77, புலிப்பட்டி-73.6, சோழவந்தான்-70.6, மேட்டுப் பட்டி-80, குப்பணம்பட்டி-24, கள்ளிக்குடி-66.8, பேரையூர்-62.2, ஆண்டிபட்டி-62.4.

பேரையூர், கீழவளவு, மேல வளவில் தலா ஒரு வீடு என 3 கூரை வீடுகளின் சுவர்கள் இடிந்தன. புறநகர் பகுதியிலுள்ள பல கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தது. சில இடங்களில் வயல்வெளிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. கண்மாய்கரைகளை பலப்படுத் தவும், நீர்வழிப்பாதை ஆக்கிர மிப்புகளை அகற்றவும் விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வைகையில் 6 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் சென்றதால் மதுரை வைகை கரையோரப்பகுதிக்கு மக்கள் செல்லத் தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x