Published : 27 Nov 2021 03:08 AM
Last Updated : 27 Nov 2021 03:08 AM

அங்கன்வாடி ஊழியருக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவு :

சிங்கம்புணரி வடவன்பட்டி அங்கன்வாடி பணியாளர் கனிமொழி. இவரது கணவர் தென்னவன். கனிமொழிக்கு செயற்கை கருத்தரித்தல் முறையில் 2014-ல் இரட்டைக் குழந்தை பிறந்தது. கர்ப்ப காலத்தில் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுரை கூறியதால் விடுமுறையில் இருந் தார்.

இந்நிலையில் அவரை பணிநீக்கம் செய்து சிவகங்கை ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதையடுத்து தன்னை பணியில் சேர்த்து பணப்பலன்களை வழங்க உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் 2 ரிட் மனுக்களை கனிமொழி தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி எஸ்.மதி பிறப்பித்த உத்தரவு: மகளிருக்கு 12 வாரம் மகப்பேறு விடுமுறை வழங்கலாம் என்று சட்டம் உள்ளது. மனுதாரர் 7 மாதம் 11 நாட்கள் விடுமுறையில் இருந்துள்ளார். சட்டப்படியான 3 மாத விடுமுறையை கழித்தால் மனுதாரர் 4 மாதம் 11 நாள் விடுமுறையில் இருந்துள்ளார். பணி நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணியில் சேர்க்க நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x