செண்டங்காடு அரசுப் பள்ளி அருகே - சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை :

செண்டங்காடு அரசுப் பள்ளி அருகே -  சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை :
Updated on
1 min read

பட்டுக்கோட்டை செண்டங்காடு அரசுப் பள்ளி அருகே சாலை யில் வேகத்தடை அமைக்க பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை- வடசேரி சாலையில், சூரப்பள்ளம் அருகே அமைந்துள்ளது செண்டங்காடு கிராமம். இங்குள்ள சாலை அண்மையில் அகலப்படுத்தப்பட்டு, சீரமைக்கப்பட்டது.

இதையடுத்து, இச்சாலையில் தினமும் அதிகளவில் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் சென்று வருகின்றன.

இக்கிராமத்தில், சாலையோரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் அருகில் வேகத்தடை எதுவும் அமைக்கப்படாததால், மாணவர்கள் சாலையைக் கடப்பது மிகவும் சிரமமாகவும், அச்சமளிப்பதாகவும் உள்ளது.

அதிவேகத்தில் வரும் வாகனங்கள் பள்ளிக்கு அருகில் வரும்போது வேகத்தை குறைக்காமல் செல்வதால், எந்தநேரத்திலும் விபத்து நேரக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது.

எனவே, செண்டங்காடு பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in