Published : 11 Nov 2021 03:08 AM
Last Updated : 11 Nov 2021 03:08 AM

இன்று ‘பீமா லோக்பால்’ தினம் - காப்பீடு தொடர்பான 1,416 புகார்களுக்கு தீர்வு :

சென்னை

சென்னை காப்பீட்டு குறைதீர்ப்பாளர் அலுவலகம் வெளியிட்டசெய்திக்குறிப்பு:

காப்பீடு தொடர்பான புகார்களை விரைந்து விசாரித்து தீர்வுகாண்பதற்காக, காப்பீட்டு குறைதீர்ப்பாளர் (இன்சூரன்ஸ் ஆம்புட்ஸ்மேன்) என்ற அமைப்பை மத்திய அரசு கடந்த 1998 நவ.11-ம் தேதி ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆண்டுதோறும் நவ.11-ல், பீமா லோக்பால் தினம் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வரப்படுகிறது.

அதன்படி, பீமா லோக்பால் தினம் (நவ.11) இன்று கொண்டாடப் படுகிறது. சென்னை உட்பட நாடுமுழுவதும் 17 காப்பீட்டு குறைதீர்ப்பாளர் அலுவலகங்கள் உள்ளன.தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒரு பகுதி ஆகியவை சென்னை அலுவலகத்தின்கீழ் வருகிறது.

ஆயுள், பொது மற்றும் மருத்துவக் காப்பீடு தொடர்பான புகார்களை இந்த அலுவலகம் விசாரித்துதீர்வு வழங்குகிறது. இங்கு புகார்களை அளிக்க எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

கடந்த 2020-21 நிதியாண்டில் சென்னை அலுவலகம் மூலம், காப்பீடு தொடர்பாக 1,677 புகார்கள் பெறப்பட்டு, 1,416 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில், 40% புகார்கள் ஆயுள் காப்பீடு, 14% பொதுக் காப்பீடு, 46% மருத்துவக் காப்பீடு தொடர்பானவை.

கரோனா காலத்திலும் காப்பீட்டுதாரர்களின் புகார்கள் காணொலி மூலம் விசாரித்து தீர்வு காணப்பட்டது. இதற்காக, கடந்த பிப்ரவரிமாதம் ஆன்லைன் மூலம் புகார்களை பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x