வாகனம்  மோதி பொறியாளர் உயிரிழப்பு  :

வாகனம் மோதி பொறியாளர் உயிரிழப்பு :

Published on

மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். சமீபத்தில் இவர் உயிரிழந்தார். இவரது மகன் ராஜேந்திரபிரசாத் (27). பொறியியல் பட்டதாரி.

இவர் தனியார் கட்டிட ஒப்பந்ததாரராக இருந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று காலை பணி நிமித்தமாக திருநகர் பகுதிக்கு தனது பைக்கில் சென்றுவிட்டு, மதியம் 2 மணியளவில் விராட்டிபத்து நோக்கி நான்கு வழிச் சாலையில் திரும்பினார்.

விளாச்சேரி மொட்டைமலை பகுதியில் பின்னால் வந்த நான்கு சக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் உயிரிழந்தார். நாகமலை புதுக்கோட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in