Published : 04 Nov 2021 03:14 AM
Last Updated : 04 Nov 2021 03:14 AM
திருப்பத்தூர் மாவட்ட உதவி வனப்பாது காவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில்,ஆலங்காயம் வனச்சரகர் இளங்கோ தலைமையில், வனவர்கள் சஞ்சீவி, முத்தன், வெங்கடேசன், வனக்காப் பாளர்கள் துளசிராமன், முரளி மற்றும் வனத்துறை ஊழியர்கள் ஆலங்காயம் பகுதியை யொட்டியுள்ள வனப்பகுதியில் நேற்று காலை 9.30 மணியளவில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த காசி (60), பன்னீர்செல்வம்(36), லட்சுமணன்(60), கோபி (27) ஆகிய 4 பேரும் ஜவ்வாதுமலை காப்புக்காட்டுக்குள் சென்று அங்கு புள்ளிமானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனைக்காக ஆலங்காயம் வழியாக கொண்டு வரும்போது கையும், களவுமாக சிக்கினர்.
இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த வனத்துறையினர் 4 பேரையும் கைது செய்து அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT