தமிழக முதல்வருக்கு ஏஇபிசி தலைவர் நன்றி :

தமிழக முதல்வருக்கு  ஏஇபிசி தலைவர் நன்றி :
Updated on
1 min read

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரும், அகில இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் (FIEO) தலைவருமான ஏ.சக்திவேலை, மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு உறுப்பினராக நியமனம் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் சக்திவேல், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ‘மாநில வளர்ச்சியின் ஓர் அங்கமாக தமிழகத்துக்கு சீரமைக்கப்பட்ட மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவை அமைத்து, அதில் என்னை உறுப்பினராக நியமித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

தொழில்துறையில் மேற்கொண்டு வரும் பணிகள் மூலம், மாநிலத்தின் தொழில் துறை வளர்ச்சிகாணும். ஏற்றுமதியும் பன்மடங்கு உயரும்’ என குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in