பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடக்கம் :

பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடக்கம் :
Updated on
1 min read

பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் முழு நேர கூட்டுறவு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான பயிற்சி தொடக்க விழா நடந்தது. இவ்விழாவிற்கு கிருஷ்ணகிரி மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம் தலைமை வகித்து, பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார். கூட்டுறவு சங்கத்தின் சரக துணைப்பதிவாளர் செல்வம், கூட்டுறவு பால்வளத்துறை துணைப்பதிவாளர் கோபி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இதில், முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர்க்கப்பட்டுள்ள பெண் பயிற்சியாளர்கள் 143, ஆண் பயிற்சியாளர்கள் 111 பேர் என மொத்தம் 254 பேருக்கு பயிற்சி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு, பயிற்சியின் சிறப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து விழிப் புணர்வு வழங்கப்பட்டது. இதில், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில், பயிற்சி நிலைய முதல்வர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in