ஒருங்கிணைந்த சேவை மைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் :

ஒருங்கிணைந்த சேவை மைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சேவை மைய திட்டத்திற்கு 7 பணியிடங்களுக்கான விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின் றன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சேவை மைய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி, மூத்த ஆலோசக பணியிடம், வழக்கு ஆலோசகர் பணியிடம், தகவல் தொடர்பு அலுவலர், உதவியாளர் ஆகிய பணி நியமனம் செய்திட சமூகநல ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து உரிய விண்ணப்பங்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலக அறை எண் 2-ல் நேரில் சமர்பிக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in