விழுப்புரத்தில் கோஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை தொடக்கம் :

விழுப்புரம் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பட்டு சேலைகளை பார்வையிடும் ஆட்சியர் மோகன் .
விழுப்புரம் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பட்டு சேலைகளை பார்வையிடும் ஆட்சியர் மோகன் .
Updated on
1 min read

விழுப்புரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி யது.

விழுப்புரம்கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் மோகன் தொடக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி பண்டிகையையொட்டி கடலூர் மண்டலத்திற்கு ரூ.18 கோடி விற்பனை இலக்காகவும், அதில்விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையத்திற்கு ரூ.1.50கோடியும், திண்டிவனம் விற் பனை நிலையத்திற்கு ரூ.60 லட்சமும் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளிசிறப்புத்தள்ளுபடி 30 சதவீத வசதியுடன் அரசு ஊழியர்களுக்கும் தவணை முறைகடன் விற்பனை வசதியும் உண்டு என்றார். அப்போது முதுநிலை மண்டல மேலாளர் சாதிக்அலி, வரத்தக மேலாளர் கந்தசாமி, விற்பனை நிலைய மேலாளர் பார்வதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in