ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் -  பயிற்சி மருத்துவர்கள், மேற்படிப்பு  மாணவர்கள் 77 பேரை சேர்க்க அனுமதி :

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் - பயிற்சி மருத்துவர்கள், மேற்படிப்பு மாணவர்கள் 77 பேரை சேர்க்க அனுமதி :

Published on

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறைவிடப் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ பட்டய மேற் படிப்பு மாணவர்கள் என மொத்தம் 77 பேரை சேர்த்துக்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இக்கல்லூரியில் நடப்பாண்டில் 100 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது. மேலும் 50 மாணவர்களை நடப்பு ஆண்டிலேயே சேர்க்க அனுமதி பெறுவதற்கு தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத் துள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்தவர்களை உறைவிடப் பயிற்சி மருத்துவர்களாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் சேர்க்க நடப்பாண்டில் 40 சீட்டுகளுக்கான அனுமதி கிடைத்துள்ளது. மேலும் குடும்பநல மருத்துவத் துறையில் 23 பேர், பிரசவ சிகிச்சைப் பிரிவில் 6 பேர், மயக்கவியல் 4, குழந்தைகள் பிரிவு 4 என மொத்தம் 37 பட்டய மேற்படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை அனுமதிக்கப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in