

திண்டுக்கல் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் பூங்கொடி வரவேற்றார். வேலுச்சாமி எம்.பி. முன்னிலை வகித்தார். இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்து கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். பள்ளபட்டி ஊராட்சித் தலைவர் பரமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.