Published : 29 Oct 2021 03:11 AM
Last Updated : 29 Oct 2021 03:11 AM

பசும்பொன் தேவர் குரு பூஜையில் பங்கேற்க - அரசியல் கட்சியினருக்கு நேரம் ஒதுக்கீடு :

பசும்பொன் தேவர் குரு பூஜை விழாவில் பங்கேற்று மரியாதை செலுத்த அரசியல் கட்சியினருக்கு நேரம் ஒதுக்கீடு செய்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பசும்பொன்னில் அக்.30-ம் தேதி காலை 9 மணிக்கு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் 10 அமைச்சர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு காலை 10 முதல் 10.15 மணி வரையும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்வி அறக்கட்டளைக்கு காலை 10.15 முதல் 10.30 வரை, மதிமுகவுக்கு 10.30 முதல் 10.45 வரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 10.45 முதல் 11 மணி வரை ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுக்கு 11 முதல் 11.15, பாஜகவுக்கு 11.15 முதல் 11.30, தமாகாவுக்கு 11.30 முதல் 11.45, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு 11.45 முதல் 12, நாம் தமிழர் கட்சிக்கு 12 முதல் 12.15, தேமுதிகவுக்கு 12.15 முதல் 12.30, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு 12.30 முதல் 12.45, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்துக்கு பிற்பகல் 12.45 முதல் 1 மணி வரை ஒதுக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகத்துக்கு பிற்பகல் 1 முதல் 1.15, அமமுகவுக்கு 1.15 முதல் 1.30, பாமகவுக்கு 1.30 முதல் 1.45, மக்கள் நீதி மய்யத்துக்கு 1.45 முதல் 2, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 முதல் 2.15, அகில இந்திய பார்வர்ட் பிளாக் (தமிழ் மாநிலக் குழு) 2.15 முதல் 2.30, மனித உரிமைக் கட்சிக்கு 2.30 முதல் 2.45, அகில இந்திய முக்குலத்தோர் பாசறைக்கு 2.45 முதல் 3, அகில இந்திய பார்வர்ட் பிளாக் (சுபாஷிஸ்ட்) 3 முதல் 3.15, அகில இந்திய தேவரின மக்கள் பாதுகாப்பு படை மற்றும் முக்குலத்தோர் பாதுகாப்பு படைக்கு 3.15 முதல் 3.30, அகில பாரத இந்து மகா சபைக்கு 3.30 முதல் 3.45 வரை ஒதுக்கப்பட்டுள்ளது.

உலக தேவர் சங்க கூட்டமைப்புக்கு 3.45 முதல் 4, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு மாலை 4 முதல் 4.15, பசும்பொன் தேசியக் கழகத்துக்கு 4.15 முதல் 4.30, தேவர் பேரவை இளைஞரணிக்கு 4.30 முதல் 4.45, தென்னாட்டு மக்கள் கட்சிக்கு 4.45 முதல் 5, அகில இந்திய வல்லரசு பார்வர்ட் பிளாக் கட்சிக்கு 5 முதல் 5.15, முக்குலத்தோர் புலிப்படைக்கு 5.15 முதல் 5.30, பசும்பொன் மக்கள் கழகத்துக்கு 5.30 முதல் 5.45 வரை நேரம் ஒதுக்கீடு செய்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x