

திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியில் கடந்த இரு நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
கடந்த 24-ம் தேதி, மாவட்டத்தில் அதிகபட்சமாக அவிநாசியில் 76 மி.மீ மழை பதிவானது. அவிநாசி, கருவலூர், உப்பிலிபாளையம், நடுவச்சேரி, சின்னேரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக குலை தள்ளிய நிலையில் இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன. உரிய இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, சேத விவரம் குறித்து கணக்கிடும் பணியில் வருவாய்த் துறை, தோட்டக்கலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.