தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கல்லூரிக்கு சுமை ஆட்டோவில் வந்து இறங்கும் மாணவிகள்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கல்லூரிக்கு சுமை ஆட்டோவில் வந்து இறங்கும் மாணவிகள்.

போதிய பேருந்து வசதி இல்லாததால் - சுமை ஆட்டோவில் கல்லூரிக்கு வரும் மாணவிகள் :

Published on

ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரியில் படிக்கும் கிராமப் புற மாணவிகள், கல்லூரிக்கு வந்து செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால், அவர்கள் வாடகை சுமை ஆட்டோவில் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாடு அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த கிராமப் புற மாணவி கள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் படித்து வருகின்றனர்.

கரோனா தளர்வுக்கு பிறகு, அண்மையில் இக்கல்லூரி திறக் கப்பட்ட நிலையில், தற்போது கிராமப்புறங்களில் இருந்து போதுமான அளவு நகரப் பேருந்து கள் இயக்கப்படவில்லை. இத னால், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, திருவோணம், வெட்டிக்காடு உள்ளிட்ட பகுதி களில் இருந்து கல்லூரிக்கு வரும் மாணவிகள் பெரும் சிரமத்துக் குள்ளாகி உள்ளனர்.

பேருந்துக்காக காத்திருந்தால், கல்லூரிக்கு உரிய நேரத்துக்கு செல்ல முடியாது என்பதால், இப்பகுதி மாணவிகள் சுமை ஆட்டோவை, வாடகைக்கு எடுத்து நாள்தோறும் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு, ஏற்கெனவே இயக்கப்பட்ட நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என மாணவி கள் வெட்டிக்காட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால், இதுவரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தினர் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை.

இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, “கறம்பக்குடி, திருவோணம் வழியாக ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு உரிய நேரத்தில் மாணவிகள் வந்து செல்லும் வகையில் அரசு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண் டும். போதிய பேருந்துகள் இல்லாததால், நாள்தோறும் சுமை ஆட்டோவை வாடகைக்கு எடுத்து அதில் ஏராளமானோர் நெருக்கி அமர்ந்துகொண்டு உயிரை பணயம் வைத்து கல்லூரிக்கு வந்து செல்கிறோம். இதற்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் கூறி யது: கறம்பக்குடியிலிருந்து ஒரத்த நாட்டுக்கு அரசுப் பேருந்து இயக் கப்படுகிறது. இந்த வழித்தடம் முழுவதும் கிராமப்புறங்கள் என்பதால், பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால், பயணிகள் ஏறுவதில் சிரமம் உள்ளது. இந்த வழித்தடத்தில் கல்லூரி மாணவிகள் பயன்பெறும் வகையில் கூடுதல் பேருந்தை இயக்க உயர் அலுவலர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in