வார இறுதி நாட்களில்  -  கோயில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி  :

வார இறுதி நாட்களில் - கோயில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி :

Published on

தமிழகத்தில் கரோனா காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வார இறுதி நாட்களில் கோயில்கள் பூட்டப்பட்டிருந்தன. தற்போது கரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து அரசு வாரத்தில் ஏழு நாட்களும் கோயி லுக்குச் செல்லலாம் என்று அரசு அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் காலை 6 மணிக்கே கோயில்கள் திறக்கப்பட்டன. பக்தர்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சென்று வழிபட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in