Published : 14 Oct 2021 05:57 am

Updated : 14 Oct 2021 05:57 am

 

Published : 14 Oct 2021 05:57 AM
Last Updated : 14 Oct 2021 05:57 AM

சிறப்பாசிரியர் தேர்வுக்கான புதிய பட்டியல் வெளியீடு :

சென்னை

தையல், ஓவியம், இசை ஆகிய சிறப்பாசிரியர் தேர்வுக்கான, திருத்தப்பட்ட புதிய தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சிறப்பாசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, 2018-ல் அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து, அதே ஆண்டு தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியானது.


உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருத்தப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியல் 2019 செப். 9-ம் தேதி வெளியிடப்பட்டது. வழக்குகள் காரணமாக, குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கிவைக்கப்பட்டன.

இந்நிலையில், 2018 ஆகஸ்ட் 13-ம் தேதி நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில், தையல், ஓவியம், இசை ஆகிய 3 பாடங்களுக்கு திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தகுதியான விண்ணப்பதாரர்கள் கிடைக்காத காரணத்தால் ஏற்பட்ட காலியிடங்களுக்கு நடத்தப்பட உள்ள, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்களுக்கு வரும் 23, 24-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியல்களில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், ஓவியம் (17stdrawinggrievance@gmail.com), தையல் (17stsewinggrievance@gmail.com), இசை (17stmusicgrievance@gmail.com) ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு தகவல் அனுப்பி, முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x