Published : 12 Oct 2021 03:15 am

Updated : 12 Oct 2021 03:15 am

 

Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

ஆட்டோ ஓட்டுநரின் சடலத்தை வாங்க மறுத்து கும்பகோணத்தில் உறவினர்கள் போராட்டம் :

கும்பகோணம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வேட்டமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(24), ஆட்டோ ஓட்டுநர். இவர், பிளஸ் 1 படித்துவரும் 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இவரது காதலுக்கு சிறுமியின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கார்த்தி(22) என்பவர் மூலமாக கோணங்கிபள்ளம் பிரிவு சாலை பகுதிக்கு பிரபாகரனை வரவழைத்த சிறுமியின் தந்தை, அவரை கத்தியால் குத்தியதில் பிரபாகரன் உயிரிழந்தார். இதுதொடர்பாக, பந்தநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தந்தை மற்றும் கார்த்தி ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், பிரபாகரனின் சகோதரி பிரியங்கா அளித்த புகாரில், திமுக பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின்பேரில்தான் பிரபாகரன் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, இந்தக் கொலை வழக்கில் திமுக பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரபாகரனின் உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள், கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், பிரபாகரனின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.





Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x