

தஞ்சாவூரில் அனுமதி பெறாத 3 கடைகளை மாநகராட்சியினர் நேற்று பூட்டி, சீல் வைத்தனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட் சிக்கு சொந்தமான இடத்தில் 99 ஆண்டுகள் குத்தகை அடிப் படையில் சுதர்சன சபா என்ற நாடக மன்றம் உள்ளது. தற்போது குத்தகை காலம் முடிவடைந் துள்ளதால், அந்த இடத்தை மாநகராட்சி நிர்வாகம் கைப்பற்ற முடிவு செய்தது. இதையடுத்து சபா நிர்வாகிகள் நீதிமன்றத்தை நாடினர்.
இதற்கிடையே, சபா வளாகத் தில் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல், தன்னிச்சையாக மதுபானக் கூடம், பேக்கரி, ஹோட் டல், செல்போன் கடை ஆகியவை கட்டப்பட்டு உள்வாடகைக்கு விடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, நகர் ஊரமைப்பு சட்டம் 1971-ன் படி அனுமதி பெறாமல் கட்டப்பட்ட இந்த கடைகளை அகற்றுமாறு ஆகஸ்ட் மாதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் நோட்டீஸ் வழங்கினர். மேலும், செப்.22-ம் தேதி ஹோட்டலை மட்டும் பூட்டி, சீல் வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, மதுபானக் கூடம், பேக்கரி, செல்போன் கடை ஆகியவற்றின் வாயிலில் அப்போது நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
நோட்டீஸ் காலம் முடிவடைந் ததையடுத்து, மாநகராட்சி ஆணை யர் க.சரவணகுமார் உத்தரவின் பேரில், நகரமைப்பு அலுவலர் எம்.ராஜசேகரன், இளநிலை பொறி யாளர் கண்ணதாசன் மற்றும் மாந கராட்சி அலுவலர்கள் நேற்று சுதர்சன சபா வளாகத்தில் இருந்த பேக்கரி, மதுபானக் கூடம், செல் போன் கடை ஆகிய 3 கடைகளை பூட்டி, சீல் வைத்தனர். அசம்பா விதங்கள் நடப்பதை தடுக்கும் விதமாக, அப்பகுதியில் ஏராள மான போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.