Published : 19 Sep 2021 03:17 AM
Last Updated : 19 Sep 2021 03:17 AM

பொது இடங்களில் இலவச வைஃபை: 2,600 பேர் பயன்பாடு :

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரிப்பன் கட்டிட வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 49 ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டு, இந்த கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தகம்பங்களில் வைஃபை இணைப்பு சேவை நிறுவப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் இந்த சேவை பயன்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு வைஃபை சேவையை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஸ்மார்ட் கம்பங்கள் இடம்பெற்றுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை https://chennaicorporation.gov.in/gcc/images/WiFiSmartPol.pdf என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.இந்தசேவையை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2,594 பேர், 231 ஜிபி டேட்டா அளவுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x