ரங்கத்தில் - 45-வது பாகவத சம்மேளனம் :

ரங்கத்தில் நடைபெற்ற ராம் பஜன் மண்டலியின் 45-வது பாகவத சம்மேளனம் மற்றும்  சீதா ராம கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
ரங்கத்தில் நடைபெற்ற ராம் பஜன் மண்டலியின் 45-வது பாகவத சம்மேளனம் மற்றும்  சீதா ராம கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
Updated on
1 min read

திருச்சி ராம் பஜன் மண்டலியின் 45-வது பாகவத சம்மேளனம் மற்றும்  சீதா ராம கல்யாணம் ரங்கம் எஸ்.ஆர் மஹாலில் கடந்த 13-ம் தேதி தொடங்கி, 3 நாட் கள் நடைபெற்றது.

முதல் நாளன்று பலராம சாஸ்திரி, கணபதி ஹோமத்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து, டால்மியா என்.கோபாலஸ்வாமி குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்.

மோகனுர் காந்த் கவுண் டின்ய பாகவதர் மற்றும் கோவிந்தபுரம் ஞானேஸ்வர் பாகவதர் மற்றும் குழுவினர் அஷ்டபதி பஜனையும், மாலையில் மாயவரம் ஞானகுரு பாகவதர் நெல்லை வெங்கடேஷ் பாகவதர் குழுவினர் பஜனையும் திவ்யநாமமும் நடைபெற்றன.

மேலும், எஸ்.சவும்யா வாய்ப்பாட்டும், பிக்ஷாண்டார் கோவில் தியாகராஜ பாக வதர் குழுவினரின் பஜனையும் நடைபெற்றன.

2-ம் நாள் காலை விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணமும், சென்னை காந்த் பாகவதர் கோஷ்டியின் பஜனையும் நடைபெற்றன. மாலை சென்னை ஞானானந்த பஜன் மண்டலி மற்றும் கப்பணமங்களம் வெங்கடராம குழுவினரின் பஜனையும் நடைபெற்றன. திருச்சி சமரனே சுகம் குழுவினரின் நாம சங்கீர்த்தனமும், கலைமாமணி ரேவதி முத்துசாமியின் ரங்கம் பாரதநாடியாலயா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன.

3-ம் நாள் நிகழ்ச்சி காலை சம்பிரதாய உஞ்ச விருத்தியுடன் தொடங்கியது, பிறகு விழுப்புரம் ஜெயதீர்த்த பாகவதர் குழுவினர் சீதா ராம கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தனர். மாலை வரதராஜபுரம் சாய் பிரசாத் பாகவதர் வசந்த கேளிக்கை பாவளிம்பு மற்றும் ஆஞ்சநேய உற்சவம் நடத்தப்பட்டது.

மேலும், திருவாசி நீதிராஜ் குழுவினரின் நாதஸ்வர கச்சேரியும், திருச்சி நாமாது வார் கோகுல் குழுவினரின் நாமசங்கீர்தனம் மற்றும் ரங்கம் ஹயவதனா பஜன் மண்டலியின் தாசர் பாடல்கள் நடைபெற்றன.

இதற்கான ஏற்பாடுகளை திருச்சி ராம் பஜன் மண்டலி உறுப்பினர்கள் செய்திருந் தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in