

விருதுநகர் அருகே குல்லூர் சந்தையைச் சேர்ந்தவர் நாகமுத்து (33). கூலித் தொழிலாளி. மனைவி நிர்மலாதேவி என்ற பேபி (32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நாகமுத்து வுக்கு வேறொரு பெண்ணுடனும், நிர்மலாதேவிக்கு வேறொரு ஆணுடனும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓராண்டுக்கு முன் குழந்தைகளுடன் நிர்மலாதேவி தனியாகச் சென்றார். இவரை சமாதானம் செய்து நாகமுத்து கடந்த வாரம் அழைத்து வந்தார்.
ஆனால், கடந்த 10-ம் தேதி முதல் நிர்மலாதேவி காணாமல் போனதாக அவரது அண்ணன் மூர்த்தி(47) சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சூலக்கரை போலீஸார் நாக முத்துவிடம் விசாரித்தபோது, நிர்மலாதேவியுடன் கடந்த 9-ம் தேதி இரவு தகராறு ஏற்பட்டதும், அப்போது கட்டையால் தாக்கிக் கொன்று சடலத்தை எரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அதையடுத்து, நாகமுத்துவை போலீஸார் கைது செய்தனர்.