கிருஷ்ணகிரி மாவட்டத்தில் - கூடுதலாக ஈர நிலங்களை கண்டறிய வேண்டும் : ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி அறிவுரை

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஈர நில கண்காணிப்புக்குழு கூட்டத்தில் பேசும் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஈர நில கண்காணிப்புக்குழு கூட்டத்தில் பேசும் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூடுதலாக ஈர நிலங்கள் உள்ள இடங்களை கண்டறிய வேண்டும் என ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஈர நிலங்கள் பராமரிப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். டிஆர்ஓ., சதீஸ், மாவட்ட வன அலுவலர் பிரபு, உதவி வன பாதுகாவலர் கார்த்திகேயனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

முதல்வர் மாநிலம் முழுவ தும் 100 ஈர நிலம் காடுகள் உருவாக்குவதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெனுகொண்டாபுரம், ஓசூர் ராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி ஆகிய 3 ஏரிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதில், முதற்கட்டமாக போச்சம்பள்ளி வட்டம் பெனுகொண்டாபுரம் ஏரியை பராமரிப்பதற்கு அறிவிப்பு ஆணை வெளியிடப்படுகிறது. மேலும், மாவட்டத்தில் கூடுதலாக ஈர நிலங்கள் உள்ள இடங்களை கண்டறிய வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in