திருப்பத்தூர் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு : காளைகள் முட்டியதில் 20 பேர் காயம்; 6 பேர் மீது வழக்கு

திருப்பத்தூர் அருகே மின்னல்குடிபட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு.
திருப்பத்தூர் அருகே மின்னல்குடிபட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு.
Updated on
1 min read

திருப்பத்தூர் அருகே தடையை மீறி நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர். 6 பேர் மீது போலீ ஸார் வழக்கு பதிவு செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப் பத்தூர் அருகே மின்னல்குடிபட்டி காளியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளியில் ஆண்டுதோறும் திருவிழா மற்றும் மஞ்சுவிரட்டு நடத்துவது வழக் கம்.

கரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டிலும், நடப்பு ஆண்டிலும் திருவிழா நடக்கவில்லை. மஞ்சுவிரட்டு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மஞ்சுவிரட்டு நடத்த சமூகவலைதளங்களில் சிலர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இதையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளுடன் மின்னல் குடிபட்டி வயல்வெளிகளில் காளை வளர்ப்போர் திரண்டனர். மஞ்சுவிரட்டை காண 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். காளைகள் முட்டி யதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திருக்கோஷ்டியூர் போலீஸார், 7 காளைகளை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தடையை மீறி மஞ்சு விரட்டு நடத்தியது தொடர்பாக 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in