சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் மரணம் :

சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் மரணம் :
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் மண்ணச் சநல்லூர் அருகே உள்ள மான்பிடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். சமை யல் வேலை செய்து வரு கிறார்.

இவரது மனைவி நித்யா(23), தனது 11 மாத பெண் குழந்தை பவ்யா  யுடன் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, மழையால் ஊறியிருந்த ஓட்டு வீட்டின் மண் சுவர் இடிந்து இருவர் மீதும் விழுந்துள்ளது. இதில் இருவரும் மூச்சுத்திணறி அதே இடத்தில் உயிரிழந்தனர். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீஸார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in