ஓவியங்களை விற்று கரோனா நிவாரண நிதி : குழந்தைகளுக்கு சிவகங்கை ஆட்சியர் பாராட்டு :

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் ஓவியங்கள் விற்ற பணத்தை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய குழந்தைகள்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் ஓவியங்கள் விற்ற பணத்தை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய குழந்தைகள்.
Updated on
1 min read

தமிழ்நாடு ஓவியர்கள் முன்னேற்றச் சங்கம், சிவகங்கை கலைமகள் ஓவியப் பயிற்சி மையம் ஆகியவை சார்பில் மாவட்டத்தில் குழந்தைகளின் தனித் திறனை வளர்க்கும் வகையில் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 26 மாணவர்கள் அவரவர் வீட்டில் இருந்தவாறு மே 15 முதல் ஜூலை 1-ம் தேதி வரை 320 ஓவியங்களை வரைந்தனர். அதன் பிறகு இந்த ஓவியங்களை வீதி, வீதியாகச் சென்று விற்பனை செய்தனர். அதில் கிடைத்த ரூ.22,200-ஐ முதல்வரின் கரோனா நிவாரண நிதியாக ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் குழந்தைகள் வழங்கினர். இவர்களை ஆட்சியர் பாராட்டியதுடன், தனித்தனியாக பாராட்டுச் சான்று வழங்கப்படும் எனத் தெரிவித்தார். ஓவியர்கள் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவர் முத்துக்கிருஷ்ணன் உடனிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in