விருதுநகர் மாவட்டத்தில் - பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 5 சிறப்பு குழுக்கள் அமைப்பு :

விருதுநகர் மாவட்டத்தில்  -  பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 5 சிறப்பு குழுக்கள் அமைப்பு :
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 5 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படாமல் தடுக்க, விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என் பதை ஆய்வு செய்யவும், சட்ட விரோதமாக வீடுகளில் பட்டாசு உற்பத்தி செய்வதைத் தடுக்கவும் வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலர்கள் அடங்கிய 5 சிறப்பு ஆய்வுக் குழுக்களை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. இந்த குழுக்கள் வாரந்தோறும் மாற்றியமைக்கப்படும். இக்குழுக் கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தி, தவறு செய்யும் நபர்களை கண்டறிந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க உதவும். பட்டாசு உற்பத்தி தொடர்பாக விதிமுறைகளை மீறும் ஆலைகள், தனி நபர்கள் குறித்து தனி வட்டாட்சியருக்கு (தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற் சாலைகள் ஆய்வு) 9342694959 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in