ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் புகார் அழைப்பு :

ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள்  புகார் அழைப்பு :
Updated on
1 min read

ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் புகார் செய்யலாம், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் வீட்டில் இருக்கவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அரசு அறிவித்துள்ளது.

இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் தனிமையில் வாழும் முதியோர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் மருந்துகள் ஆகிய உதவிகளை ஊரடங்கு காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 04286 280230 என்ற மாவட்ட சமூகநல அலுவலகம், நாமக்கல் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தை 99948 75096 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மேலும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களும் மேற்கண்ட எண்களில் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in