தூத்துக்குடி மாவட்ட வருவாய் துறையில் - அவுட் சோர்சிங் மூலம் 25 பணியிடங்கள் நிரப்ப முடிவு : மே 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தூத்துக்குடி மாவட்ட வருவாய் துறையில்  -  அவுட் சோர்சிங் மூலம் 25 பணியிடங்கள் நிரப்ப முடிவு :   மே 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் ஆட்சியர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் மசால்ஜி 10, இரவுக் காவலர் 12, தோட்டக்காரர் 1, துப்புரவு பணியாளர் 2 ஆகிய நிலையில் மொத்தம் காலியாக உள்ள 25 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தகுதியான நபர்களை அவுட் சோர்சிங் மூலம் அளிக்க, அரசு விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட, அரசின் அங்கீகாரம் பெற்ற தகுதி வாய்ந்த முகமை (ஏஜென்சி)கள், முத்திரையிடப்பட்ட கவரில் உரிய விண்ணப்பத்தை முகமை அங்கீகார நகல், ஊதிய ஒப்பந்த புள்ளி விவரங்களுடன் 31.05.2021-க்கு முன்பாக ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.

கவரின் மேல்புறம் 'மசால்ஜி / இரவுக்காவலர் ஆவுட் சோர்சிங் விண்ணப்பம்' என குறிப்பிட வேண்டும். 31.05.2021-க்கு பின்னர் வரப்பெறும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஒப்பந்த தாரர்கள் முன்னிலையில் 04.06.2021 அன்று ஒப்பந்த புள்ளி கள் திறக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in