

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 14,87,782 வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்த வுள்ளனர். இதில் முதல் முறை வாக்காளர்கள் 36,173 ஆவர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கான இறுதி வாக் காளர் பட்டியல் கடந்த 20.01.2021 அன்று வெளியிடப்பட்டது. அதன் பிறகும் பெயர் சேர்க்க மறுவாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, 3,202 ஆண்கள், 3,939 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 7,145 பேர் புதிதாக சேர்ந்தனர். 1,162 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
இறுதி வாக்காளர் பட்டியலின் படி 7,27,083 ஆண்கள், 7,60,560 பெண்கள், 139 மூன்றாம் பாலினத் தவர்கள் என மொத்தம் 14,87,782 வாக்காளர்கள் உள்ளனர்.
விளாத்திகுளம் தொகுதியில் 1,05,903 ஆண்கள், 1,10,544 பெண்கள், 5 மூன்றாம் பாலினத்த வர்கள் என மொத்தம் 2,16,452 வாக்காளர்கள் உள்ளனர். தூத்துக் குடி தொகுதியில் 1,39,348 ஆண்கள், 1,45,892 பெண்கள், 54 மூன்றாம் பாலினத்தவர்கள் என 2,85,294 வாக்காளர்கள் உள்ளனர்.
திருச்செந்தூர் தொகுதியில் 1,18,807 ஆண்கள், 1,26,196 பெண்கள், 17 மூன்றாம் பாலினத்த வர்கள் என மொத்தம் 2,45,020 வாக்காளர்கள் உள்ளனர். வை குண்டம் தொகுதியில் 1,10,433 ஆண்கள், 1,13,947 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,24,384 வாக்காளர்கள் உள்ளனர்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் 1,22,647 ஆண்கள், 1,28,042 பெண்கள், 28 மூன்றாம் பாலினத் தவர்கள் என மொத்தம் 2,50,717 வாக்காளர்கள் உள்ளனர். கோவில் பட்டி தொகுதியில் 1,29,945 ஆண்கள், 1,35,939 பெண்கள், 31 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,65,915 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தமுள்ள வாக்காளர்களில் 18 முதல் 19 வயதுடைய முதல் முறை வாக்காளர்கள் 36,173 பேர். 20 முதல் 29 வயதுவரை 3,02,636 பேர், 30 முதல் 39 வயது வரை 3,27,137 பேர், 40 முதல் 49 வயது வரை 3,09,908 பேர், 50 முதல் 59 வயது வரை 2,41,086 பேர், 60 முதல் 69 வயது வரை 1,55,402 பேர், 70 முதல் 79 வயது வரை 85,923 பேர் பேர் மற்றும் 80 வயதுக்கு மேல் 29,517 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.