தபால் வாக்களிக்க விரும்புவோர் மார்ச் 16-க்குள் விண்ணப்பிக்கலாம் : மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு

தபால் வாக்களிக்க விரும்புவோர் மார்ச் 16-க்குள் விண்ணப்பிக்கலாம்  :  மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரி கி.செந்தில் ராஜ் அறிக்கை:

சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் மற்றும் லோகோ பைலட், உதவி லோகோ பைலட், மோட்டார் மேன், ரயில்வே கார்டு, ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகர், ரயில்வே குளிர்சாதன பெட்டி உதவியாளர்கள், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீக ரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், விமான பணியாளர்கள், கப்பல் பணியாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் அஞ்சல் மூலம் வாக்குச் சீட்டுகள் பெற்று வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் விரிவான அறிவுரைகள் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக அந்தந்த பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் படிவம் 12-டி விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, 16.3.2021-க்குள் படிவம் 12டி-ல் தங்கள் விருப்பத்தினை தெரிவித்து விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ அல்லது சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமோ ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் படிவம் 12-டி விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in