திருப்பத்தூர் அருகே ரூ.1.38 கோடி மதிப்பிலான புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் முதல்வர் பழனிசாமி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்

திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முதல்வர் பழனிசாமி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதையடுத்து, புதிய கட்டிடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன் குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கினார்.
திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முதல்வர் பழனிசாமி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதையடுத்து, புதிய கட்டிடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன் குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கினார்.
Updated on
1 min read

திருப்பத்தூர் அடுத்த எலவம் பட்டி பகுதியில் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடத்தை தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன் குத்துவிளக்கேற்றி இனிப்புகளை வழங்கினார்.

வேலூர் மாவட்டத்துடன் திருப்பத்தூர் இருந்தபோது, திருப்பத்தூரில் வட்டார போக்கு வரத்து அலுவலகம் பகுதி அலுவலகமாக தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்புப் பகுதி யில் தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வந்தது.

திருப்பத்தூர் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பிறகு, திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டது. இதை யடுத்து, திருப்பத்தூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, திருப் பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, புதிய கட்டிடப்பணிக்கு ரூ.1.38 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. பின்னர், கட்டுமானப்பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. இப்பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து, புதிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.

இப்புதிய அலுவலகத்தில் திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி ஆகிய வட்டங்களில் இயங்கும் வாகனங்கள் உரிமம் புதுப்பித்தல் பணிகளும், புதிய வாகனங்களுக்கு பதிவு செய்யும் பணிகள் மற்றும் இதர வாகன போக்குவரத்து சம்பந்தமான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in