ரகுராமன்.
ரகுராமன்.

ராணிப்பேட்டை பெல் நிறுவனபொது மேலாளர் பொறுப்பேற்பு

Published on

ராணிப்பேட்டை பெல் நிறுவன பொது மேலாளர் மற்றும் தலைவராக ரகுராமன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், இதே நிறுவனத்தின் இயக்குதல் பிரிவு தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்துள்ளார்.

திருச்சி என்ஐடி-யில் உற்பத்தி பிரிவில் இளநிலை பொறியியல் பட்டமும் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப பிரிவில் முதுநிலை பொறியியல் பட்டமும் பெற்றுள்ளார். 35 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ள இவர் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார். பெல் நிறுவனத்தின் கார்ப்பரேட் திட்டமிடல் மற்றும் மேம்பாடு பிரிவின் பொது மேலாளராகவும் புதுடெல்லி மற்றும் துபாயில் சர்வதேச இயக்குதல் பிரிவிலும் பணியாற்றி உள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் கள உபகரணங்களுக்கான சந்தை மேம்பாட்டில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in