சிறந்த வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான விருதை ஆளுநரிடம் பெற்றவருக்கு பாராட்டு

சிறந்த வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான  விருதை ஆளுநரிடம் பெற்றவருக்கு பாராட்டு
Updated on
1 min read

சிறந்த வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான சான்றிதழை ஆளுநரிடம் இருந்து பெற்றவரை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

சென்னையில் கடந்த 25-ம் தேதி நடந்த தேசிய வாக்காளர் தின விழாவில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரியும் நாகராஜூக்கு சிறந்த வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார். இதையடுத்து, திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனை சந்தித்து நாகராஜ் வாழ்த்து பெற்றார்.

இதுதொடர்பாக விருது பெற்ற ஆர்.நாகராஜ் கூறும்போது, "ஆவணங்களை உரிய முறையில் பதிவு செய்ததால், எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. பெயர் சேர்த்தல், இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, பெயர் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செய்ததால் வழங்கியுள்ளனர். 1300 பேருக்கு எந்தவித தவறும் இழைக்காமல் செய்தேன். எனவேதான் ஆளுநரிடம் விருது கிடைத்துள்ளது.

இதேபோல, வாக்காளர் சிறப்பு முகாம்களில் பங்கெடுப்பது மற்றும் கூட்டங்களில் பங்கேற்பது உட்பட பல்வேறு விஷயங்களை கருத்தில்கொண்டும், இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் மற்றும் ஆட்சியரின் பாராட்டு ஊக்கமளிக்கிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in